காட்பாடி காங்கேயநல்லூரில் செல்லியம் மன் கோவில் திருவி கோவில் திருவிழா வில் தாக்குதல் போலீசார் விசாரணை! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 23 ஜூன், 2025

காட்பாடி காங்கேயநல்லூரில் செல்லியம் மன் கோவில் திருவி கோவில் திருவிழா வில் தாக்குதல் போலீசார் விசாரணை!

காட்பாடி காங்கேயநல்லூரில் செல்லியம் மன் கோவில் திருவி கோவில் திருவிழா வில் தாக்குதல் போலீசார் விசாரணை!


காட்பாடி, ஜூன் 23 -

வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா காங்கேயநல்லூர் காமராஜர் தெருவை சேர்ந்தவர் பிச்சாண்டி. இவருடைய மகன் சக்திவேல் (வயது 23). கடந்த 18-ந் தேதி காங்கேயநல்லூரில் செல்லியம்மன் கோவில் திருவிழா நடந்தது. அப்போது சத்யா நகர் ராதாகிருஷ்ணன் தெருவில் சக்திவேல் அவருடைய நண்பர் வெற்றி ஆகியோர் நின்று கொண்டிருந்தனர். அவர்களுக்கும், அந்த வழியாக வந்த அதே ஊரைச் சேர்ந்த கார்த்தி, பல்லு, சிந்து, தினேஷ், ஹரி என்ற ஜாக்சன் ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.தகராறு முற்றியதில் 5 பேரும் சேர்ந்து சக்திவேல், வெற்றி ஆகிய இருவரையும் கைகளாலும், கற்களாலும் தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடை ந்த சக்திவேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து சக்திவேல் விருதுநகர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் கார்த்தி உள்பட 5 பேர் மீது போலீசார்
வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காட்பாடி தாலுகா செய்தியாளர் கே எஸ் அருண் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad