காட்பாடி சி என் ஜான் 5 வது வார்டு போதிய கால்வாய் வசதி இல்லாததால் கழிவுநீரில் நாற்று நட்டுப் போராட்டம்!
காட்பாடி , ஜூன் 23 -
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வள்ளிமலை ரோடு அருகில் உள்ள சி. என். ஜான் 5ஆவது குறுக்குத் தெருவில், கழிவுநீர் கால்வாய் இல்லை. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அவதிப்படுகின் றனர். இதுகுறித்து பலமுறை அரசு அதி காரிகளிடம் மனு அளித்தும் எந்தப் பயனும் இல்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதையடு த்து, அங்கு வசிக்கும் மக்கள் தெருவில் தேங்கும் கழிவுநீரில் நாற்று நட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காட்பாடி தாலுகா செய்தியாளர் கே எஸ் அருண்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக