மத்திய அரசை கண்டித்து மேட்டுப்பாளையம் தாலுகா சிபிஎம் கமிட்டி சார்பில் மக்கள் சந்திப்பு பிரச்சாரம் நடந்தது!!
ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்தும் .தமிழக அரசு மக்கள் நலம் சார்ந்த திட்டங்களை செயல்படுத்த வலியுறுத்தியும் கோவை மேட்டுப்பாளையம் தாலுக்கா சிபிஎம் கமிட்டி சார்பில் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் கோவை மாவட்டம் முழுவதும் கடந்த ஜூன் 12-ம் தேதி துவங்கி 22 தேதி வரை நடக்கிறது .காரமடையில் துவங்கி மேட்டுப்பாளையம் தாலுகா முழுவதும் நடைபெற்றது. அதில் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற பிரச்சார இயக்கத்திற்கு மேட்டுப்பாளையம் தாலுகா செயலாளர் கனகராஜ் தலைமையில் மாதர் சங்க மாநில மாநில குழு உறுப்பினர் ராஜலட்சுமி, சிஐடியு இன்ஜினியர் சங்க பொருளாளர் ஏ ஜி சுப்பிரமணியன், காரமடை நகர மன்ற உறுப்பினர் பிரியா ,தாலுக்கா கமிட்டி உறுப்பினர்கள், மற்றும் கட்சி உறுப்பினர்கள், மற்றும் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள் .
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக