பட்டா வழங்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்த திருநங்கைகள்!
திருப்பத்தூர் , ஜூன் 23 -
நீர்நிலை புறம்போக்கில் ஒதுக்கப்பட்ட இடத்தில் தண்ணீர் தேங்குகிறது எனவே பாச்சல் கிராமத்தில் வீட்டுமனை பட்டா வழங்க திருநங்கைகள் கலெக்டரிடம் மனு!
திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கைகள் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி நேரில் சந்தித்து மனு அளித்தனர் அந்த மனுவில் குனிச்சு பகுதியில் 50க்கும் மேற்பட்ட திருநங்கைகளுக்கு நீர்நிலை புறம்போக் கில் வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது.
இதன் காரணமாக அப்பகுதியில் மழைக் காலங்களில் அந்த நீர்நிலை புறம்போக் கில் தண்ணீர் தேங்கி விடுகிறது என அதனை வட்டார வளர்ச்சி அலுவலர் ரத்து செய்வதாக கூறப்படுகிறது இதன்காரண மாக அந்த இடத்தில் வீட்டு மனை இடம் வேண்டாம். மேலும் ஜோலார்பேட்டை ஒன்றியம் பாச்சல் கிராமத்தில் இதயம் நகர் பகுதியில் அதிக புறம்போக்கு உள்ளது அதன் காரணமாக அங்கு திரு நங்கைகளுக்கு இடம் ஒதுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
செய்தியாளர்.
மோ அண்ணாமலை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக