வீராணம் ஏரியிலிருந்து சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு மற்றும் மேட்டுப்பகுதி பாசனம் மற்றும் பராமரிப்புக்காக தண்ணீர் திறப்பு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 12 ஜூன், 2025

வீராணம் ஏரியிலிருந்து சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு மற்றும் மேட்டுப்பகுதி பாசனம் மற்றும் பராமரிப்புக்காக தண்ணீர் திறப்பு.

கடலூர் மாவட்டம் வீராணம் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. ஏரியின் மொத்த நீர் இருப்பு 1465 மில்லியன் கன அடி. தற்போதைய நீர் இருப்பு 1404 மில்லியன் கன அடியாக இருந்து வருகிறது. ஏரியின் நீர்மட்டம் 47.50 அடியில் தற்போது 47.25  அடி உள்ளது. இவ்வாறான நிலையில் வீராணம் ஏரியின் பூதங்குடி விஎன்எஸ்எஸ் மதகில் இருந்து சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு மற்றும் மேட்டுப்பகுதி பாசனம் மற்றும் பராமரிப்புக்காக வினாடிக்கு 562 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. சென்னை குடிநீருக்காக 74 கன அடி தண்ணீர் சென்று கொண்டுள்ளது. ஏரியிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கும் பாரம்பரியநிகழ்வு இன்னும் சில தினங்களில் நடைபெற உள்ள நிலையில் வீராணம் ஏரியின் கிழக்குப் பகுதி பாசன வாய்க்கால்களை முழுமையாக தூர்வாரப்பட வேண்டும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad