திமுக தொழில்நுட்ப பிரிவில் அதிமுக பொதுச் செயலாளர் மீது அவதூறு ஏற்படுத்தும் வகையில் பொய்யான தகவல் வெளியிடுவது குறித்து புகார் மனு !
வேலூர் , ஜூன் 20 -
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இடம் அதிமுகவினர் புகார் மனு
வேலூர் புறநகர் மாவட்ட கழகத்தின் சார் பாக முன்னாள் முதலமைச்சர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி யார்
அவர்கள் மீது அவதூறு ஏற்படுத்தும் வகையில் பொய்யான செய்திகளோடு
அவரின் மாண்பையும் பதிவையும் கீழ் தரமாக சித்தரிக்கும் வகையில் அருவருக் கத்தக்க வகைகள் பதிவிட்ட D M K
ITwing மீதும் அதனை பகிர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி வேலூர் புறநகர் மற்றும் மாநகர் மாவட்ட கழக வழக்கறிஞர்கள் அணி மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பிலும் வேலூர் மாவட்ட கண்காணிப்பாளர் மதிவாணன் அவர்களிடம் புகார் மனு அளிக்கப்பட்டது
இந்நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட செயலாளர் எஸ் ஆர் கே அப்பு கழக அமைப்பு செயலாளர் ராமு வேலூர் புறநகர் மாவட்ட கழக செயலாளர்.த வேலழகன் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஜனனி மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செய லாளர் ஆர் கோவிந்தசாமி மண்டலதொழி ல்நுட்ப பிரிவு துணை செயலாளர் ரித்தீஷ் நகரக் கழக செயலாளர் ஜே கே என் பழனி கஸ்பா மூர்த்தி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக