ஓட்டு வாங்க மட்டும் வருகின்றீர்களே பிரச்சனை என்றால் எங்கே செல்கிறீர்கள் துர்நாற்றத்துடன் கழிவு நீருடன் கலந்து வரும் குடிநீர் பொதுமக்கள் அவதி ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 20 ஜூன், 2025

ஓட்டு வாங்க மட்டும் வருகின்றீர்களே பிரச்சனை என்றால் எங்கே செல்கிறீர்கள் துர்நாற்றத்துடன் கழிவு நீருடன் கலந்து வரும் குடிநீர் பொதுமக்கள் அவதி !

ஓட்டு வாங்க மட்டும் வருகின்றீர்களே பிரச்சனை என்றால் எங்கே செல்கிறீர்கள்
துர்நாற்றத்துடன் கழிவு நீருடன் கலந்து வரும் குடிநீர் பொதுமக்கள்  அவதி !
திருப்பத்தூர், ஜூன் 20 -

 துர்நாற்றத்துடன் கழிவு நீருடன் கலந்து வரும் குடிநீர்! உயிரோடு இருக்கவா சாகவா? இந்த குடிநீரை நீங்க குடிச்சு பாருங்க நகராட்சி ஆணையர் மற்றும் எம்எல்ஏவுக்கு  பொதுமக்கள் கேள்வி? வீட்டின் அட்ரஸ் கொடுங்க வீடு தேடி கொண்டு வந்து நாங்க குடிநீரை தருகிறோம் பொதுமக்கள் ஆதங்கம்

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகர் பகுதி பெரியார் நகரில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்ற னர்.இந்த பகுதியில் நகராட்சி நிர்வாகத் தின் சார்பில் குடிநீர் வினியோகம் செய்ய ப்படுகிறது.இந்த நிலையில் கடந்த சில மாதங்களாககுடிநீருடன் கழிவு நீர் கலந்து வருகிறது மேலும் அதிக துர்நாற்றத்து டன் குடிநீர் வருவதால் இதனை குடிக்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது என அப்பகுதி மக்கள் ஆதங்கம் தெரிவித் தனர் அது மட்டும் இன்றி இந்த குடிநீரை பயன்படுத்தி வந்த அப்பகுதி மக்கள் சிலருக்கு அரிப்பு, சொறி சிரங்கு, மற்றும் காய்ச்சல் உள்ளிட்ட வியாதிகள் வந்து அதனால் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலை யும் ஏற்பட்டுள்ளது.
இதனால் அப்பகுதி சார்ந்த பரிமளா என்பவர் செய்தியாளர் கிடம் ஆதங்கமாக பேசினார் அப்போது ஓட்டு வாங்க மட்டும் அரசியல்வாதி வருகின்றனர் அதன் பின்பு எட்டி கூட பார்ப்பதில்லை, மேலும் கழிவுநீருடன் குடிநீர் கலந்து வருவதாக கூறி பலமுறை புகார் அளித்தோம் நகராட்சி ஆணையர் கண்டு கொள்வதில்லை வேண்டுமென் றால் இந்த குடி தண்ணீரை நாங்கள் தருகிறோம் எம்எல்ஏ மற்றும் நகராட்சி ஆணையர் விலாசம் தாருங்கள் அவர்க ளிடம் போய் நாங்க குடிக்கும் குடிநீரை  கொடுக்கிறோம் குடித்துப் பார்க்கட்டும் ஆதங்கமாக தெரிவித்தனர். மேலும் இதே நிலை நீடித்தால் மிகப்பெரிய போராட்டத் தில் ஈடுபடுவதாகவும் எச்சரிக்கை விடுத் தனர்.

செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad