மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கல்லூரி மாணவர்களுக்கான சிறப்பு குற தீர்வு நாள் கூட்டம்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 12 ஜூன், 2025

மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கல்லூரி மாணவர்களுக்கான சிறப்பு குற தீர்வு நாள் கூட்டம்!

மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கல்லூரி மாணவர்களுக்கான சிறப்பு குற தீர்வு நாள் கூட்டம்!

திருப்பத்தூர் , ஜூன் 12 -

திருப்பத்தூர் மாவட்டம் கல்லூரி மாணவர் களுக்கான சிறப்பு குறைத் தீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்திர வல்லி தலைமையில் நடைபெற்றது
குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி மற்றும் கையெழுத்து இயக்கத்தை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.  திருப்பத்தூர் மாவட்டம் திருப் பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட ரங்கில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர் களுக்கான சிறப்பு குறைத் தீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்திர வல்லி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பங்கு பெற்று தங்களது கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் மனுவாக வழங்கினர். பெரும்பான்மை யாக பெற்றோர்களை இழந்த மாண வர்கள் , தாய் அல்லது தந்தை  ஒருவரை இழந்த மாணவர்கள் பங்கு பெற்று தங்கள் கல்வியை தொடர விரும்புவதா கவும் அதற்கான பொருளாதார மற்றும் தங்கும் வசதி உள்ளிட்ட உதவிகளை செய்து தருமாறு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனர். மேலும் உயர் கல்வி பயில பொருளாதார ரீதியாக சிரமப்படுவதால் தங்களுக்கு கல்வி கடன் அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

அதனைத் தொடர்ந்து குழந்தை தொழிலா ளர் முறை எதிர்ப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சியாக மாவட்ட ஆட்சியர் தலைமை யில் குழந்தை தொழிலாளர் முறை எதிர் ப்பு தின உறுதி மொழியைஏற்றுக்கொண் டனர். மேலும் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்புக்கு ஆதரவாக கையெழு த்து இயக்கத்தினை மாவட்ட ஆட்சியர் கையெழுத்திட்டு துவக்கி வைத்தார். தொடர்ந்து துறை சார்ந்த அரசு அலுவலர் கள் அனைத்து துறை சார்ந்த மாவட்ட நிலை அலுவலர்கள்கையெழுத்திட்டனர். 
இந்நிகழ்ச்சியில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ராஜன் ,  பள்ளிக்கல்வித் துறை  அலுவலர்கள், அனைத்து துறை சார்ந்த அரசு அலுவலர்கள் மற்றும் ஏராள மான மாணவ மாணவியர்கள் பெற்றோர் கள் பங்கு பெற்றனர்.

 செய்தியாளர்.
மோ.அண்ணாமலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad