கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர். ஸ்டாலின் உத்தரவுப்படி காவல்துறை காவல் துணை கண்காணிப்பாளர்.
மகேஷ் குமார் மேற்பார்வையில் கன்னியாகுமரி போக்குவரத்து காவல்துறையினர் விபத்தை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன ர்.
இதன் தொடர்ச்சியாக இன்று கன்னியாகுமரி போக்குவரத்து காவல்துறை சார்பாக கன்னியாகுமரியை சுற்று வட்டார பகுதிகளில் உள்ள ஆட்டோக்களை ஒன்றிணைத்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பதாகைகளை தாங்கியபடி கன்னியாகுமரியை காந்தி மண்டபம் முதல் விவேகானந்தபுரம் வழியாக கொட்டாரம், சென்று மீண்டும் கன்னியாகுமரிக்கு வந்து ஆட்டோ அணிவகுப்பு விழிப்புணர்வு பேரணியை நிறைவு செய்தனர்.
இந் நிகழ்வை கன்னியாகுமரி உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர். மகேஷ் குமார் தலைமை தாங்கி விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார்கள்.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்,
என்.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக