பரமன்குறிச்சியில் - பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு திமுக நிர்வாகிகள் பங்கேற்பு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 29 ஜூன், 2025

பரமன்குறிச்சியில் - பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு திமுக நிர்வாகிகள் பங்கேற்பு.

பரமன்குறிச்சியில் திமுக சார்பில் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா,மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்பு. 

திமுக மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்பி, தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் வழிகாட்டுதல் படி பரமன்குறிச்சி திமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் 102வது பிறந்த நாளையொட்டி உடன்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பொது தேர்வுகளில் முதல் மூன்று இடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா மற்றும் 152 மாணவ, மாணவிகளுக்கு பள்ளி சீருடை வழங்கும் விழா பரமன்குறிச்சி மெயின் பஜாரில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது. 

தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொருளாளர் ராமநாதன் ,உடன்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் இளங்கோ ஆகியோர் தலைமை வகித்தனர். உடன்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் பாலசிங், உடன்குடி நகர செயலாளர் மால் ராஜேஷ், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் மகாவிஷ்ணு, ஒன்றிய பொருளாளர் பாலகணேஷ், முன்னாள் கவுன்சிலர் ராமலட்சுமி ஆகியோர் முன்னிலை வைத்தனர். மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் செந்தில் வரவேற்று பேசினார். 

நிகழ்ச்சியில் மாநில மகளிர் அணி பிரச்சாரக் குழு செயலாளர் ஜெசி பொன் ராணி, மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் செந்தில் அதிபன், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் மாடசாமி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மனோஜ், மாவட்ட மகளிர் சமூக வலைதள பொறுப்பாளர் நித்யா, சியோன் நகர் கிளை கழக செயலாளர் கிதியோன் மற்றும் மாணவ மாணவியர் பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட பிரதிநிதி மதன்ராஜ் செய்திருந்தார். நிகழ்ச்சிகளை ஐடி விங் பாபுஜி ராம்குமார், இளைஞரணி முத்துக்குமார், சுற்றுச்சூழல் அணி சிங்கராஜா ஆகியோர் ஒருங்கிணைத்தனர். முடிவில் உடன்குடி கிழக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மனோஜ் நன்றி கூறினார்.

தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad