அய்யா.எச்.பி.ஆரிகவுடரின் 54-- ஆம் நினைவுநாள் புகழஞ்சலி. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 29 ஜூன், 2025

அய்யா.எச்.பி.ஆரிகவுடரின் 54-- ஆம் நினைவுநாள் புகழஞ்சலி.

 


அய்யா.எச்.பி.ஆரிகவுடரின் 54-- ஆம் நினைவுநாள் புகழஞ்சலி. 

இன்று 28-06-2025-ல் உதகை ராவ்பகதூர்.H.B.ஆரிகவுடர்  வளாகத்தில் அமைந்துள்ள அய்யா அவர்களின் திருவுருவ சிலைக்கு  நீலகிரி மாவட்ட ஆரிகவுடர் விவசாய சங்க தலைவர் திரு.மஞ்சை.வி.மோகன் மலர்மாலை அணிவித்து  மரியாதை செலுத்தி, நினைவுநாள் நிகழ்ச்சிகளை துவக்கி வைத்தார்.


எச்.பி.ஆரிகவுடர் 54 - ஆவது நினைவுநாள் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி ஆரிகவுடர் நினைவு விழாக்குழு அறக்கட்டளை தலைவரும்,ஆரிகவுடர் விவசாயிகள் சங்க தலைவரும், படுக தேச பார்ட்டி நிறுவன தலைவருமான மஞ்சை.வி.மோகன் தலைமையில் நடைப்பெற்றது.


இந்நிகழ்ச்சிக்கு உதகை ஊராட்சி ஒன்றிய தலைவர் திரு.மாயன், முன்னாள் என்சி.எம்.எஸ் தலைவர் திரு.கண்ணபிரான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்..


சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட ஆரிகவுடர் மகன் வழி பேத்தி திருமதி.தாரா „அவரது கணவர் திரு.விங்கமாண்டர். ஜெயபிரகாஷ் அகியோர் திருவுறுவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தி நினைவுநாள் நிகழ்ச்சிகளை துவக்கி வைத்து ஆரிகவுடர் குறித்து  சிறப்புரையாற்றினார்கள்.


தனது உரையில் விவசாயிகன் நலனில் அக்கரைக்கொண்டு நீலகிரி மாவட்டத்தில் என்சிஎம்எஸ் நிறுவனத்தை 93 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி வரலாற்று படைத்தவர். 


அவரது 54- ஆவது நினைவுநாளில், அவரது குடும்பதாரான எங்களுக்கு விவசாயிகளுடன் இணைந்து புகழஞ்சலி செலுத்தும் வாய்ப்பு கிடைத்ததற்கு நன்றி கூறுகின்றோம் என தனது உரையில் குறிப்பிட்டனர்.


மேலும்  பல்வேறு சாதனைப்படைத்து படுக சமுதாயத்திற்கு மட்டுமில்லாமல் அனைத்து சமுதாயத்தைப்பற்றியும் சிந்தித்தவர் என புகழஞ்சலி செலுத்தினார்.


இந்த நிகழ்வில் நீலகிரி மாவட்ட ஆரிகவுடர் விவசாய சங்கத்தின் துணைத்தலைவர்கள்.திரு.இளித்தொரை விஸ்வநாதன்,திரு.கேத்தி பாலாட ராமசந்திரன், திரு.தொரையட்டி.போஜன், செயலாளர் திரு.அப்புகோடு நடராஜ், பொருளாளர் திரு.எடக்காடு.மகாலிங்கன்,இணை செயலாளர்கள் திரு.கரிமொர ரவி,திரு.குந்தேசப்பை நடராஜ், திரு.மேல்குந்தா பூபதி கண்ணன், திரு. தாம்பட்டி சண்முகன் செயற்குழ உறுப்பினர்கள் திரு.குருத்துகுளி. முருகன், திரு.பெம்பட்டி வாசு, நீலகிரி தோட்டக்கவலை இயற்கை விவசாயிகள் சங்கம் தலைவர் திரு.கீழ்குந்தா பெள்ளியப்பன் என்.சி.எம்.எஸ்.நிறுவன மேலாளர் திருமதி.லல்லி மற்றும் ஊழியர்கள்,


இந் நினைவு நாள் நிகழ்ச்சியை H.B. ஆரிகவுடர் நினைவுக்குழு அறக்கட்டளை, ஆரிகவுடர் விவசாயிகள் சங்கம் மற்றும் படுக தேச பார்ட்டியின் நிர்வாகிகள்  செய்திருந்தனர்


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad