பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் : - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 29 ஜூன், 2025

பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் :



ஈரோடு மீனாட்சிசுந்தரனார் சாலையில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஓய்வூதியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்று (ஜூன் 25) ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டமைப்பின் தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர்கள் பாலு, பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பிஎஸ்என்எல் செல்போன் சேவை மற்றும் நெட்வொர்க் சேவையை மேம்படுத்த வேண்டும். 4ஜி சேவையில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஓய்வூதியர்கள் சங்கங்களின் நிர்வாகிகள் பரமேஸ்வரன், பரமசிவம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ.கோபால், ஈரோடு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad