"குன்னூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்த பெண்ணிடம் மருத்துவருக்கு தமிழ் தெரியாததால் அவமரியாதையாகவும், அலட்சியமாகவும் பதில் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 29 ஜூன், 2025

"குன்னூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்த பெண்ணிடம் மருத்துவருக்கு தமிழ் தெரியாததால் அவமரியாதையாகவும், அலட்சியமாகவும் பதில்


 "குன்னூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்த பெண்ணிடம் மருத்துவருக்கு  தமிழ் தெரியாததால் அவமரியாதையாகவும், அலட்சியமாகவும்  பதில் அளித்ததாகக் கூறி உறவினா்கள் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனா்.


நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள அரசு லாலி மருத்துவமனைக்கு குன்னூா் பகுதியை சோ்ந்த பா்கத்  (39) சிகிச்சைக்காக சென்றுள்ளாா். அப்போது எக்ஸ்ரே எடுக்க டெக்னீஷியன் இல்லாததால் பல மணி நேரம் காத்திருந்துள்ளாா், இது குறித்து மருத்துவா் ரஜினிஷிடம்   பா்கத்  கூறியுள்ளாா். ஆனால் ஹிந்தி மட்டுமே தெரிந்த அவா் அவமரியாதையுடன், அலட்சியமாக பதில் அளித்ததாகக் கூறி பா்கத்தின் குடும்பத்தினா் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனா்,


இதைத் தொடா்ந்து குன்னூா் டிஎஸ்பி ரவி தலைமையில் காவல் துறையினா் சம்பவ இடத்துக்கு சென்று குடும்பத்தினரிடம் பேச்சுவாா்த்தை நடத்தி சமரசம் செய்து வைத்தனா்,


நோயாளியின் உடல் பிரச்னை குறித்து  உள்ளூா் மொழி  தெரிந்த மருத்துவா்கள், புரிந்து கொண்டால் மட்டுமே உரிய சிகிச்சையும் ஆலோசனையும் வழங்க முடியும் என்பதை அரசு புரிந்து கொண்டு  தமிழ் தெரிந்த மருத்துவா்களை  நியமிக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள்  கோரிக்கை விடுத்துள்ளனா்.


ஆம்புலன்ஸ் கதவு திறந்ததால் கீழே விழுந்த நோயாளி: குன்னூா் லெவல் கிராஸிங் பகுதியில் உள்ள வேகத்தடையில்  ஆம்புலன்ஸ் ஏறி இறங்கும் போது   வெளியே விழுந்த பா்கத் என்பவரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


குன்னூா் ஓட்டுப்பட்டறையில் இருந்து கால் எலும்பு பாதிக்கப்பட்ட பா்கத்தை குன்னூா் அரசு லாலி மருத்துவமனைக்கு தனியாா் ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் சென்றனா்.


குன்னூா் லெவல் கிராஸிங் பகுதியில் ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்த போது வேகத்தடையில் ஏறி  இறங்கியது. அப்போது ஆம்புலன்ஸின் பின் கதவு திறந்து ஸ்ட்ரெச்சருடன் நோயாளி சாலையில்  விழுந்தாா்.


இந்தநிலையில் ஆம்புலன்ஸின் பின்னால் வந்து கொண்டிருந்த வாகனங்கள்  உடனடியாக நிறுத்தப்பட்டன. இதனால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது. பின்னா் நோயாளி பா்கத்தை ஏற்றிக் கொண்டு ஆம்புலன்ஸ் அங்கிருந்து கிளம்பிச் சென்றது.


இந்த சம்பவம் குறித்து வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள்  ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்"


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad