சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் நிறைவேற்றப்பட்ட பல்வேறு திட்டப் பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்த சட்டமன்ற உறுப்பினர். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 25 ஜூன், 2025

சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் நிறைவேற்றப்பட்ட பல்வேறு திட்டப் பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்த சட்டமன்ற உறுப்பினர்.


சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ்  நிறைவேற்றப்பட்ட பல்வேறு திட்டப் பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்த சட்டமன்ற உறுப்பினர்.


சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மானாமதுரை ஊராட்சி ஒன்றியம் பெரும்பச்சேரி ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 9.13 லட்சம் மதிப்பீட்டில் நியாயவிலைக் கடையையும், மேட்டுமடை கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 4.50 இலட்சம் மதிப்பீட்டில் புதிய பயணியர் நிழற்குடையும், விளத்தூர் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 9.13 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலை கடையையும், ஆலடிநத்தம் கிராமத்தில் ரூபாய் 4.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய பயணியர் நிழற்குடையும், மேலப்பசலை ஊராட்சியில் ரூபாய் 5 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளை கிணறும், சின்ன கண்ணனூர் ஊராட்சியில் ரூபாய் 7.50 லட்சம் மதிப்பீட்டில் கலையரங்கத்தினையும், சோமாத்துர் கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூபாய் 16.55 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மையத்தினையும் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி ஆ. தமிழரசி ரவிக்குமார் அவர்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்கள். 


இந்நிகழ்வில் முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் அண்ணாதுரை, முன்னாள் ஒன்றிய குழு தலைவர் லதா அண்ணாதுரை, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொறியாளர்கள், திமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad