காளையார்கோவிலில் மருது சகோதரர்களின் பெயரில் புதிதாக அமைக்கப்பட்ட நாடக மேடையினை திறந்து வைத்த சட்டமன்ற உறுப்பினர்.
சிவகங்கை மாவட்டம் சிவகங்கை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காளையார்கோவிலில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் பெயரில் புதிதாக அமைக்கப்பட்ட நாடக மேடையினை மாண்புமிகு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், சிவகங்கை மாவட்ட அஇஅதிமுக மாவட்ட செயலாளர், சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் திரு பி. ஆர். செந்தில்நாதன் அவர்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இதில் முன்னாள் அமைச்சர், கழக அமைப்புச் செயலாளர் மாண்புமிகு திரு ஜி. பாஸ்கரன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர், முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் திரு ஏ. சி. மாரிமுத்து, ஒன்றிய கழகச் செயலாளர் கே. பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் இந்நிகழ்வில் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி மற்றும் கிளைக் கழகங்களின் அனைத்து பிரிவுகளை சேர்ந்த அஇஅதிமுக நிர்வாகிகள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக