திருச்செந்தூர் அருகே....... குமாரபுரம்-சங்கிவளை சாலையில் புதிய பாலம் அமைக்கும் பணி அதிகாரிகள் நேரில் ஆய்வு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 2 ஜூன், 2025

திருச்செந்தூர் அருகே....... குமாரபுரம்-சங்கிவளை சாலையில் புதிய பாலம் அமைக்கும் பணி அதிகாரிகள் நேரில் ஆய்வு.

திருச்செந்தூர் அருகே....... குமாரபுரம்-சங்கிவளை சாலையில் புதிய பாலம் அமைக்கும் பணி அதிகாரிகள் நேரில் ஆய்வு.,.

 தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே குமாரபுரம் சங்கிவளை பிரதான சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையில் உள்ள தரைப்பாலம் சேதம் அடைந்திருந்தது. இதனை சீரமைத்து தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதனை தொடர்ந்து திருநெல்வேலி மாவட்ட நீர்வளத்துறை சார்பில் புதிய பாலம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணியை திருநெல்வேலி மாவட்ட நீர்வளத்துறை அதிகாரி கோவிந்தராஜு இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன் பாலப் பணியை விரைந்து முடிக்க அவர் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது உதவி செயற்பொறியாளர் முருகன் ,உதவி பொறியாளர் திலக்ஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad