திருப்புவனத்தில் காவல்துறை விசாரணையில் அஜித்குமார் மர்மமான முறையில் மரணம் அடைந்ததற்க்கு திமுக அரசுக்கும்,காவல்துறைக்கும் இந்துமக்கள்கட்சி கண்டன அறிக்கை!
அதிமுக ஆட்சியில் சாத்தான்குளம் காவல்நிலைய விசாரணையில் கிறிஸ்தவ நாடாரான லாக்கப்பில் மரணமடைந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் இறப்பிற்க்கு சமுகஆர்வலர்கள்.திரைத்துறை பிரபலங்கள் மற்றும் அன்றைய எதிர் கட்சியான திமுக ஸ்டாலின், உதயநிதி உள்பட கண்டனங்கள் தெரிவித்தார்கள். விசாரணையில் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு இன்றைய வரைக்கும் சிறையில் இருக்கிறார்கள்.அது மட்டுமல்லாமல் திமுக சார்பில் ஜெயராஜ் குடும்பத்திற்க்கு கனிமொழி மூலமாக 25 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்பட்டது.
அதேபோல் இப்பொழுது நடைபெறுகின்ற திமுக ஆட்சியில் திருப்புவனம் மடப்புரம் காளியம்மன் கோவிலில் பணிபுரியும் தனியார் காவலாளி 27 வயதான அஜித்குமாரை ஒரு வழக்கு சம்பந்தமாக காவல்நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து சென்ற பொழுது மர்மமான முறையில் மரணம் அடைந்தது இந்துமக்கள்கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
ஜெயராஜ் பென்னிக்ஸ் மரணம் மட்டும் லாக்கப் மரணம்.ஆனால் காவல்துறையினர் அஜித்குமாரை விசாரணைக்கு அழைத்து சென்று மர்மமான முறையில் இறந்தது மாரடைப்பு மரணமாம்? கிறிஸ்தவ நாடாரான லாக்கப்பில் மரணமடைந்த ஜெயராஜ் பென்னிக்கிஸ் ஆதரவாக குரல் கொடுத்தவர்கள் எல்லாம் அஜித்குமாருக்கு குரல் கொடுக்க தயங்குவது ஏன்? எதிர்கட்சியாக இருக்கும் பொழுது ஜெயராஜ் குடும்பத்தாருக்கு 25லட்சம் ரூபாய் நிதி கொடுத்த திமுக.தற்பொழுது ஆளுங்கட்சியாக இருக்கும் திமுக தங்களது ஆட்சியில் லாக்கப் மரணமடைந்த அஜித்குமார் குடும்பத்தாருக்கு நிதி உதவி திமுக வழங்காதது ஏன்?அதிமுக ஆட்சியில் ஜெயராஜ், பெனிக்ஸ் மரணத்திற்க்கு சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைத்தார்கள்.
திமுக ஆட்சியில் அஜித்குமார் மரணத்திற்க்கு சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்காமல் சஸ்பெண்ட் நடவடிக்கை மட்டும் எடுத்தது ஏன்?ஜெயராஜ் பென்னிக்ஸ் கிறிஸ்தவ நாடார் என்பதால் நீதியும் நிதியும் வழங்கப்பட்டது.ஆனால் அஜித்குமார் இந்து நாடர் என்பதால் நீதியும் நிதியும் மறுக்கப்பட்டதா? என்று கேள்விகள் எழுகிறது. மரணத்தில் கூட மதம் பார்த்து தான் கண்டனம் தெரிவிப்பார்களா?நீதியும் நிதியும் வழங்குவார்களா??? இது எந்த விதத்தில் நியாயம்??
தேசத்திற்க்கு எதிராக மதரீதியாக செயல்படும் குண்டு வெடிப்பு தேசவிரோத இஸ்லாமிய பயங்கரவாதிகள், பிரிவினைவாத தேசதுரோகிகள்,ஊழல்வாதிகள்,
கனிமவள கொள்ளைகாரர்கள், கொலைகாரர்கள்,போதை வஸ்து வியாபாரிகள் அனைவரும் இந்நாட்டில் சுதந்திரமாக நடமாடுகிறார்கள்.அவர்கள் மீது இதுபோன்ற எந்த ஒரு விசாரணையும் செய்யாமல் குற்றவாளிகளான அவர்களுக்கு ராஜ மரியாதை கொடுக்கப்படுகிறது. ஆனால் ஏழ்மையான குடும்பத்தை சார்ந்த அஜித்குமாரை மட்டும் விசாரணை என்ற பெயரில் மரணம் அடையும் வரையும் அஜீத்குமாரை கொலை வெறி தாக்குதல் நடத்திய காவல்துறையினரின் தவறுக்கு தமிழக முதல்வர் பொருப்பேற்று மன்னிப்பு கேட்க வேண்டும். அஜித்குமாரை விசாரணைக்கு அழைத்து சென்று அஜித்குமாரின் மரணத்தில் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்து அனைவரையும் சிறையில் அடைக்கவேண்டும். அஜித்குமாரின் குடும்பத்தாருக்கு ஒரு கோடி ரூபாய் நிதியும், அன்னாரது வீட்டில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டுமென இந்துமக்கள்கட்சி தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைக்கிறது.
திருப்புவனத்தில் காவல்துறை விசாரணையில் அஜித்குமார் மர்மமான முறையில் மரணம் அடைந்ததற்க்கு திமுக அரசுக்கும்,காவல்துறைக்கும் இந்துமக்கள்கட்சி கண்டன அறிக்கை!
அதிமுக ஆட்சியில் சாத்தான்குளம் காவல்நிலைய விசாரணையில் கிறிஸ்தவ நாடாரான லாக்கப்பில் மரணமடைந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் இறப்பிற்க்கு சமுகஆர்வலர்கள்.திரைத்துறை பிரபலங்கள் மற்றும் அன்றைய எதிர் கட்சியான திமுக ஸ்டாலின், உதயநிதி உள்பட கண்டனங்கள் தெரிவித்தார்கள். விசாரணையில் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு இன்றைய வரைக்கும் சிறையில் இருக்கிறார்கள்.அது மட்டுமல்லாமல் திமுக சார்பில் ஜெயராஜ் குடும்பத்திற்க்கு கனிமொழி மூலமாக 25 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்பட்டது.
அதேபோல் இப்பொழுது நடைபெறுகின்ற திமுக ஆட்சியில் திருப்புவனம் மடப்புரம் காளியம்மன் கோவிலில் பணிபுரியும் தனியார் காவலாளி 27 வயதான அஜித்குமாரை ஒரு வழக்கு சம்பந்தமாக காவல்நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து சென்ற பொழுது மர்மமான முறையில் மரணம் அடைந்தது இந்துமக்கள்கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக