காலை நேரங்களில் யானைகள் நடமாட்டத்தால் மக்கள் அவதி
பந்தலுார் அருகே பிதர்காடு கைவட்டா கிராம குடியிருப்பு பகுதிகளில் புகுந்த இரண்டு ஆண் யானைகளால் பரபரப்பு ஏற்பட்டது.பந்தலுார் அருகே பாட்டவயல், ஸ்கூல்மட்டம், சந்தக்குன்னு உள்ளிட்ட பகுதிகள் முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டி அமைந்துள்ளது. இதனால், அடிக்கடி யானைகள் ஊருக்குள் வந்து செல்வது வழக்கம்.வனத்துறை அதிகாரிகளும் அவ்வப்போது மனித மிருக மோதல்கள் ஏற்படா வண்ணம் பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.இருப்பினும் கூடலூர் பாட்டவயல் கைவட்டா குடியிருப்பு வழியாக வந்த இரண்டு ஆண் யானைகள், தமிழக - கேரளா சாலையை கடந்து, அருகிலுள்ள தேயிலை தோட்டம் வழியாக ஆணப்பஞ்சோலா வனப்பகுதிக்குள் சென்றன. யானைகள் கிராம வழியாக சென்று திடீரென சாலையை கடந்ததால் மக்கள் அச்சம் அடைந்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நௌஷாத் செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக