கூடலூர் மாக்கு மூலா தேன் வயல் பகுதியில் நடைப்பயணம் மேற்கொள்ளும் காட்டு யானைகள் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 19 ஜூன், 2025

கூடலூர் மாக்கு மூலா தேன் வயல் பகுதியில் நடைப்பயணம் மேற்கொள்ளும் காட்டு யானைகள்


கூடலூர் மாக்கு மூலா தேன் வயல் பகுதியில் நடைப்பயணம் மேற்கொள்ளும் காட்டு யானைகள் 


மாக்கமூலா பகுதியில் இருந்து தேன்வயல் வழியாக எச்சம்வயல் பகுதிக்கு வந்து பாக்கு, தென்னை, வாழை உள்ளிட்ட பயிர்களை சேதபடுத்தி உள்ளது 

 

இதனால் அதிகளவில் நஷ்டம் அடைந்துள்ளனர். அந்த பகுதிகளில் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை எதிர்கொண்டு வருகிறார்கள். குறிப்பாக இந்த பகுதிகளில் யானைகள் கூட்டமாக நுழைந்து, வயல்களில் பயிர்களை துவம்சம் செய்துள்ளன.


கடந்த 2மாதமாக இது தொடர்வதாகவும் எந்த நடவடிக்கையும்  இல்லை விவசாயிகள் பெரும் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.


இரவு நேரங்களில் யானைகள் சாலைகளிலும் குடியிருப்பு பகுதிகளிலும் உலா வருவதால், மக்கள் இரவு நேரங்களில் வெளியே செல்லும் தைரியம் இழந்துள்ளனர். பெண்கள், முதியவர்கள், மாணவர்கள் போன்றவர்கள் மிகவும் அச்சத்துடன் உள்ளனர்.


வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடங்களுக்கு விரைந்து சென்றும், யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டும் வருகின்றனர். ஆனால், தொடர்ந்து காட்டு யானைகள் வருகை தருவதால், அவர்களும் சிரமம் அனுபவித்து வருகின்றனர். தீவிர கண்காணிப்பு, ட்ரோன் கண்காணிப்பு, மற்றும் எலெக்ட்ரிக் வேலி அமைப்பு போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது அவசியம் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நௌசாத் செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad