அகப்பைகுளம் தூய அந்திரேயா ஆலயத்தில் சுற்றுச் சூழல் கரிசனை ஞாயிறாக அனுசரிக்கப்பட்டது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 15 ஜூன், 2025

அகப்பைகுளம் தூய அந்திரேயா ஆலயத்தில் சுற்றுச் சூழல் கரிசனை ஞாயிறாக அனுசரிக்கப்பட்டது.

அகப்பைகுளம் தூய அந்திரேயா ஆலயத்தில் சுற்றுச் சூழல் கரிசனை ஞாயிறாக அனுசரிக்கப்பட்டது.

தென்னிந்திய திருச்சபை தூத்துக்குடி நாசரேத் திருமண்டல சுற்றுச் சூழல் கரிசனை துறை செயலர் ஜாண்சாமுவேல் அவர்களது மூலமாக ஆயத்தம் செய்யப்பட சிறப்பு ஆராதனை முறை தயார் செய்து வழங்கினார்கள்.

அகப்பைகுளம் தூய அந்திரேயா ஆலயத்தில் சுற்றுச் சூழல் கரிசனை ஞாயிறாக அனுசரிக்கப்பட்டது. சிறப்பு ஆராதனையில் அந்திரேயா ஆலய பாடகர் குழுவினர் ஸ்டீபன் ஞானதுரை, செல்வகுமார், விக்டர்ஜெய்சன், ஜேசுதாஸ்ராஜ், ராபின்சன், ஜெபஸ், சைமன் ஆகியோர் ஆராதனையில் ஜெபங்களை நடத்தினார். சேகரத் தலைவர் பாஸ்கரன் சிறப்பு செய்தி வழங்கினார்.

திருச்சபையார் சுற்றுச் சூழல் கரிசனையொடு சிறப்பு ஜெபங்களும் மனிதனின் கடமைகளை மறுபரிசீலனை செய்யப்பட்டதோடு பிரதிக்கனைகள் எடுக்கப்பட்டது. ஆராதனையை தொடர்ந்து சுற்றுச் சூழல் கரிசனை விழா கொண்டாடப்பட்டது. ஆரம்ப ஜெபம் ஆலய பரிபாலன பொருளாளர் பொன்ராஜ் செய்தார்கள். சேகர பொருளாளர் ஸ்டீபன் ஞானதுரை வரவேற்புரை வழங்கினார். 

நிகழ்ச்சிகளை திருமண்டல பெருமன்ற உறுப்பினர் ஜேசுதாஸ்ராஜ் தொகுத்து வழங்கினார்கள். சிறப்பு விருந்தினராக சாக்ரட்கார்ட் பள்ளி நிர்வாக இயக்குனர் ஜெபக்குமார் சார்லஸ், விஜயாஜெபக்குமார் சார்லஸ் பங்குபெற்று அகப்பைக்குளத்தில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் சந்தன மரக்கன்றுகள் பரிசுகளாக வழங்கப்பட்டது . 

 சேகர செயலாளர் செல்லத்துரை நன்றியுரை ஆற்றினார்கள். விழா ஏற்பாடுகளை அந்திரேயா ஆலய சுற்றுச் சூழல் கரிசனை குழுவினர் மிகவும் சிறப்பாக செய்திருந்தார்கள். நிகழ்வில் அனைத்து சபையாரும் பங்குபெற்று சிறப்பித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad