திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் குடமுழுக்கு நன்னீராட்டு விழா வருகின்ற 07.07.2025 அன்று வெகு சிறப்பாக நடைபெறவுள்ளது. இவ்விழாவிற்கான யாக கால பூஜை 01.07.2025 அன்று நடைபெறவுள்ளது. திருக்கோயில் குடமுழுக்கு நன்னீராட்டு விழாவை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களிலிருந்து வருகை புரியும் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது. மேலும், இவ்விழாவினை முன்னிட்டு சுமார் 10 இலட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆய்வின்போது தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தெரிவித்தாவது :-
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலுக்கு சுவாமி தரிசனம் மேற்கொள்ள பக்தர்கள் நாள்தோறும் வருகைபுரிவதாலும், மேலும், விரைவில் குடமுழுக்கு நன்னீராட்டு விழா நடைபெறவுள்ளதாலும், பக்தர்கள் மற்றும் உள்ளூர் மக்களின் வசதிக்காகவும் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து இன்றையதினம் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. மேலும், பாதாள சாக்கடை திட்டப் பணிக்கு விரைவில் உரிய தீர்வு காணப்படும் எனவும், பக்தர்களின் வசதிக்காக தற்காலிக வாகன நிறுத்தங்களும், வருங்காலங்களில் நிரந்தரமாக வாகன நிறுத்தங்கள் அமைப்பதற்கும் இடம் தேர்வு செய்யப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
முன்னதாக, திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் வாகனங்களை நிறுத்துவதற்கு ஏதுவாகவும், போக்குவரத்து வசதிக்காகவும் வீரபாண்டியபட்டிணம் ஊராட்சிக்குட்பட்ட ஜே.ஜே. நகர் பகுதியில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்படவுள்ள இடத்தினையும், திருச்செந்தூர்- திருநெல்வேலி சாலையில் உள்ள வேட்டையார் மடம் அருகில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்படவுள்ள இடத்தினையும்
தொடர்ந்து, நாழிக்கிணறு சாலை, காந்திபுரம் தலையூன்றி சாஸ்தா கோவில் முதல் ஆவுடையார் குளம் நீரோடை கால்வாய் வழியாக கன்னியாகுமரி மாநில தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் புறவழிச்சாலையை சீரமைக்கும் பணிகளையும், ஆவுடையார் குளம் உபரி நீர் கால்வாயினையும் மாண்புமிகு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
பின்னர், திருச்செந்தூர் நகராட்சிக்குட்பட்ட தோப்பூரில் அமைந்துள்ள பாதாள சாக்கடைத்திட்டத்தின் தலைமை கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தினையும், ஆலந்தலை வளமீட்பு பூங்கா பகுதியில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் மீன்வளம் – மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், நகராட்சி நிர்வாக இயக்குநர் சு.சிவராசு, மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத் ஆகியோர் தலைமையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக