இது குறித்து அவர்கள் அனுப்பியுள்ள மனுவில்:
தமிழ்நாடு அரசின் திருச்செந்தூர் நகராட்சியில் வீட்டு வரி. சொத்து வரி, தொழில் வரி மற்றும் கமர்ஷியல் வரி நகராட்சி விதிகளுக்கு மீறி கடுமையாக வரி உயர்த்தியுள்ளதை கண்டித்து. தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு தமிழ்நாடு வணிகர் சங்கத்தின் சார்பாக மாநில அரசின் மாநகராட்சி நகராட்சி பேரூராட்சியில் வணிக நிறுவனங்களுக்கு பன்மடங்காக உயர்த்திய வாடகை உயர்வை குறைத்திட பலதடவை கோரிக்கை வைத்து மனுகொடுத்துள்ள நிலையில்
திருச்செந்தூர் நகராட்சியில் நகராட்சி விதிகளுக்கு மீறி பன்மடங்காக வீட்டு வரி, சொத்து வரி, தொழில் வரி போன்றவைகள் கண்மூடித்தனமாக உயர்த்தியுள்ளதை கண்டித்து பலமுறை முதலமைச்சர் வருவாய் துறை மந்திரி மற்றும் மாவட்ட ஆட்சியர் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவட்ட அமைச்சர் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் நகராட்சி ஆணையர் மற்றும் துறை ரீதியான அத்தனை பேருக்கும் நேரில் மனுவாக கொடுத்துள்ளோம்
அதுமட்டுமின்றி ஆர்ப்பாட்டம் சாலைமறியல் செய்தும் ஒருநாள் கைதாகியுள்ளோம் ஆனாலும் அரசு மக்கள் கோரிக்கைக்கு செவி சாய்க்க வில்லை ஆகையால் அரசுக்கு உரைக்கும் வண்ணம் வருகிற 17ஆம் தேதி செவ்வாய் கிழமையன்று காலை ஆறு மணி முதல் மாலை ஆறு மணி வரை ஒருநாள் அடையாள கடையடைப்பு செய்து அன்றையதினம் இருபத்தி ஏழு வார்டுகளுக்கு உட்பட்ட அனைத்து சமுதாய மக்களும் அனைத்து வியாபாரிகள் சங்கங்களும் ஒன்றுசேர்ந்து காலை பத்து மணியளவில் கோரிக்கையை வலியுறுத்தி நகராட்சி அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் செய்வதாக போராட்டக்குழு சார்பாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது
அரசு மக்களுக்கான பிரச்சினையில் விரைந்து நல்ல முடிவு எடுத்து மக்களை போராட்ட களத்திற்குள் தள்ளாமல் நல்ல முடிவை எதிர்பார்க்கின்றனர் என அந்த மனுவில் குறிப்பிடபட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக