அதிமுக புதிய நிர்வாகிகள் மாவட்ட செயலாளர் அவர்களிடம் வாழ்த்து பெற்றனர் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 14 ஜூன், 2025

அதிமுக புதிய நிர்வாகிகள் மாவட்ட செயலாளர் அவர்களிடம் வாழ்த்து பெற்றனர்

 


அதிமுக புதிய நிர்வாகிகள் மாவட்ட செயலாளர் அவர்களிடம் வாழ்த்து பெற்றனர் 


நீலகிரி மாவட்டத்தின், மாவட்ட, ஒன்றிய, பேரூராட்சிக் கழகம் மற்றும் சார்பு அணிகளின் புதிய நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் மாவட்டக் கழக செயலாளர் கப்பச்சி வினோத் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.


நீலகிரி மாவட்டத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் புதிய நிர்வாகிகளின் பட்டியலை அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ளது.


இதில் மாவட்ட, ஒன்றிய, பேரூராட்சிக் கழகம் மற்றும் சார்பு அணிகளின் புதிய பொறுப்புகளுக்கான நிர்வாகிகளின் பட்டியல் தலைமைக் கழகம் வெளியிட்டுள்ளது.


இதன்படி, குந்தா மேற்கு ஒன்றியக் கழகத்தின் புதிய ஒன்றிய செயலாளராக ராஜேஷ் கண்ணா அவர்களும், ஜெகதளா பேரூராட்சி கழகத்தின் பேரூராட்சி செயலாளராக சஜீவன் அவர்களும் மற்றும் தோட்ட தொழிலாளர்கள் பிரிவு அண்ணா தொழிற் சங்கத்தின் இணைச் செயலாளராக டைகர் ஹில் மணி அவர்களும் புரட்சிதலைவி அம்மாபேரவை இணை செயலாளராக தலையாட்டு மந்து ராஜேஸ், நொண்டிமேடு சிவக்குமார், எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளராக முன்னால் நகரமன்ற உறுப்பினர் சம்பத்  உள்ளிட்டோருக்கு  புதிய பொருப்புகளை அதிமுக பொதுச் செயலாளர் திரு. எடப்பாடி K. பழனிச்சாமி வெளியிட்டுள்ளார்.


மேலும் புதிதாக பொறுப்பேற்ற மாவட்ட, ஒன்றிய, பேரூராட்சிக் கழகம் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் நீலகிரி மாவட்டக் கழக செயலாளர் கப்பச்சி வினோத் அவர்களை சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றனர்.


இந்நிகழ்ச்சியில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் K.R.அர்ஜுணன், முன்னாள் குன்னூர் சட்டமன்ற உறுப்பினர் சாந்திராமு, மாவட்ட துணை செயலாளர் கோபால கிருஷ்ணன் மற்றும் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad