கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக பேருந்துகளில் நடைபெற்ற திருட்டு சம்பவங்கள் தொடர்பாக மாவட்டத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குபதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக குற்றவாளியை கண்டறிந்து கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர். ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்கள்.
உத்தரவின் பேரில் நாகர்கோவில் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர். லலித் குமார் மேற்பார்வையில் உதவி ஆய்வாளர்.ஜெசி மேனகா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படையினரின் விசாரணையில் இத்தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டது, பொள்ளாச்சி அண்ணா நகர் காலனியை சேர்ந்த கண்ணன் என்பவரின் மனைவி விஜயா (35), அதே பகுதியை சேர்ந்த லட்சுமணன் என்பவரின் மனைவி மஞ்சு (35), சாத்தூர் மேல காந்திபுரம் பகுதியை சேர்ந்த முருகன் என்பவரின் மகன் அரவிந்த் (29), ஆகியோர் என தெரியவந்தது.
மூன்று நபர்களும் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து திருட்டுபோன தங்க நகைகள் மற்றும் பணம் மீட்கப்பட்டது. சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்த தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்,
என்.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக