ஆபரேஷன் சிந்தூர் வெற்றி கொண்டாட்டம. திருச்செந்தூரில் பாஜக தேசிய கொடி ஏந்தி பேரணி மாவட்ட தலைவர் சித்ராங்கதன் தலைமையில் ஏராளமானோர் பங்கேற்பு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 1 ஜூன், 2025

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி கொண்டாட்டம. திருச்செந்தூரில் பாஜக தேசிய கொடி ஏந்தி பேரணி மாவட்ட தலைவர் சித்ராங்கதன் தலைமையில் ஏராளமானோர் பங்கேற்பு.

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி கொண்டாட்டம. திருச்செந்தூரில் பாஜக தேசிய கொடி ஏந்தி பேரணி மாவட்ட தலைவர் சித்ராங்கதன் தலைமையில் ஏராளமானோர் பங்கேற்பு.

பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ராணுவ வீரர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக திருச்செந்தூரில் மாலை 3. 30 மணிக்கு வெற்றி பேரணி நடத்தப்பட்டது. திருச்செந்தூர் இரும்பு வளைவு (ஆர்ச்) பகுதியில் தொடங்கி நாழி கிணறு வரை தேசியக்கொடி ஊர்வலமாக சென்றனர். 

இதில் மாவட்ட தலைவர் சித்ராங்கதன், மாவட்ட பொதுச்செயலாளர் கனல் ஆறுமுகம், மாவட்ட துணைத் தலைவர் நவமணிகண்டன், நகரத் தலைவர் செல்வகுமரன் , சண்முக ஆனந்த், சங்கர நயினார்,பிரசாந்த், 

மாவட்ட செயலாளர்கள் சபரிமலை, ஜெயா நாச்சியார், வசந்தி, சரஸ்வதி,கார்த்தீசன், ஆனந்த்ராஜன், முகேஷ் குமார் பலவேச கண்ணன், ஆறுமுகராஜா, மீனாட்சி, செல்வி, விஜயலக்ஷ்மி, கட்டெரும்பு, இசக்கிமுத்து, திருச்செந்தூர் ஒன்றிய தலைவர் பேச்சி முத்து, 

உடன்குடி ஒன்றிய தலைவர் சங்கர குமார் ,ஸ்டீபன் லோபோ,திருச்செந்தூர் நகர துணைத் தலைவர் மணிகண்டன், சாத்தான்குளம் ஒன்றிய மண்டல தலைவர் சரவணன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

தேசிய கொடியை ஏந்தி வெற்றி கோஷங்களை முழங்கி சென்றனர். இதற்கான ஏற்பாடுகளை திருச்செந்தூர் நகர தலைவர் செல்வகுமரன் செய்திருந்தார்.

தமிழர் குரல் செய்திகளுக்காக அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad