பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடநூல்கள் மற்றும் சீருடை வழங்கும் நிகழ்ச்சி!
வேலூர் மாவட்டம் குடியாத்தம் இன்று 02-06-2025, பள்ளிகள் தொடங்கியுள்ள நிலையில் பள்ளிக் கல்வித்துறை சார்பாக மாணவச் செல்வங்களுக்கு 2025-2026ம் கல்வியாண்டிற்கான புதிய பாடநூல்கள் மற்றும் சீருடை. வழங்கி திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர், கழக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார் அதன் தொடர்ச் சியாக வேலூர் மாவட்டம் பள்ளிக்கல்வித் துறை சார்பில் குடியாத்தம் நடுப்பேட்டை அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு புதிய பாடநூல்கள் மற்றும் பள்ளி சீருடை கள் வழங்கும் நிகழ்ச்சி கோட்டாட்சியர் சுபலட்சுமி அவர்கள் தலைமையில்
நடைபெற்றது நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் வி.அமலு விஜயன் அவர்கள்
நகர மன்ற தலைர் எஸ். சௌந்தர் ராஜன்அவர்கள் கலந்துக்கொண்டு மாணவ, மாணவியர்களுக்கு புதிய பாட நூல்கள் மற்றும் பள்ளி சீருடை வழங்கி சிறப்புரை ஆற்றினார். மேலும் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் அமலுவிஜயன் ரொக்கப் பரிசு வழங்கி பாராட்டினார் உடன் தலைமை ஆசிரியர் அகிலா நகராட்சி ஆணையர் மங்கையர்க்கரசன் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் எம் எஸ் அமர் நாத் நகர மன்ற உறுப்பினர்கள் ஜாவித் அகமத் ரேணுகா பாபு இந்துமதி கோபால கிருஷ்ணன் கவிதா பாபு மாவட்ட கல்வி அலுவலர் வட்டார கல்வி அலுவலர் மற்றும் பலர் கலந்துக்கொண்டனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக