அரசுக்கு சொந்தமான பொது இடத்தில் நீதிமன்ற உத்தரவு அவமதிக்கும் வகை யில் மாவட்ட நிர்வாகம்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 13 ஜூன், 2025

அரசுக்கு சொந்தமான பொது இடத்தில் நீதிமன்ற உத்தரவு அவமதிக்கும் வகை யில் மாவட்ட நிர்வாகம்!

அரசுக்கு சொந்தமான பொது இடத்தில் நீதிமன்ற உத்தரவு அவமதிக்கும் வகை யில் மாவட்ட நிர்வாகம்!
வேலூர் , ஜூன் 13 -

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எடுத்துக்காட்டாக அமைய வேண்டும், ஆனால் அரசுக்கு சொந்தமான பொது இடத்தில் அனைத்து துறை சார்ந்த சங்க கொடிக்கம்பங்களை மாவட்ட ஆட்சியர் அகற்றாமல் உள்ள அவலநிலை!!

நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும்  மாவட்ட நிர்வாகம்.

வேலூர் மாவட்டம், வேலூர் தாலுகா,  சத்து வாச்சாரி, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பொது இடத்தில் உள்ள வரி சையாக துறைக்கு ஒன்று வீதம் வைக்கப் பட்டுள்ள  கொடிக்கம்பங்களை இதுவரை அகற்றாமல் மாவட்ட ஆட்சியரும் கண்டு கொள்ளாமல் இதைக் கேட்டால் திசை திருப்பி பேசுவதும், அகற்றாமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். துறை சார்ந்த சங்கத்தினரிடம்  கேட்டால் அரசு ஊழியர் கள் சங்கம் என கூறுகின்றனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஒரு எடுத்துக் காட்டாக அமைய வேண்டும் ஆனால் இங்கு சட்டத்திற்கு மாறாக அரசு அலு வலர்களுக்கு சங்கம் இதுவே தவறானது ஆனால் சங்கத்தின் கட்டிடம் கொடி கம்பங்கள்ப் பட்டுள்ளது வேதனையை அளிக்கிறது. பொது இடங்களில் உள்ள கொடிக்கம்பங்களை அகற்ற நீதிமன்ற உத்தரவு பிறப்பித்து இருந்த நிலையில் ஏப்ரல் மாதம் முடிந்தும் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நீதிமன்ற உத்தர வை அவமதிக்கும் வகையில் இதனை எல்லாம் அகற்றாமல் விட்டு வைத்ததா கவும், இதனை ஏன் அகற்றவில்லை எனக் கேட்டால் அந்த சங்கங்கள், ஆட்சியரின் ஒப்புதல் உள்ளது எனக் கூறுகின்றனர். பொது இடத்தில் உள்ள இந்த கொடி கம்பங்களை அகற்றாமல் காலம் தாழ்த்தி வருகின்றனர் என பொதுமக்கள் குற்றச் சாட்டு வைக்கின்றனர். அனைவருக்கும் ஒரு எடுத்துக்காட்டாக விளங்கக்கூடிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடி கம்பங்களை அகற்றாதது வேதனை அளிக்கிறது. எனவே மாவட்ட ஆட்சியர் உடனடியாக இந்த கொடி கம்பங்களை அகற்றி ஒப்புதலின்றி அமைத்த கொடி கம்பங்களின் அந்தந்த துறை சங்கம் நிர்வாகத்திற்கு  அபராதம் விதித்து, அகற்ற செலவாகும் செலவினத்தையும், அகற்றிய இடத்தை சீரமைத்து பூங்கா போன்று அமைத்து ஒழுங்குபடுத்த செலவாகும் அனைத்து செலவையும் அந்தந்த துறையின் நிர்வாகத்திடமே வசூலிக்க வேண்டுமெனவும், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad