ஈரோட்டில் டீக்கடையை கொளுத்திய நபர் கைது - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 24 ஜூன், 2025

ஈரோட்டில் டீக்கடையை கொளுத்திய நபர் கைது


ஈரோடு வில்லரசம்பட்டி, பெரிய சேவூர், குறிஞ்சி நகரைச் சேர்ந்தவர் சின்னசாமி (65). அதே இடத்தில் டீக்கடை மற்றும் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்தவர் தர்மலிங்கம் (49). குடிபோதையில் சம்பவத்தன்று டீக்கடையில் அமர்ந்து அனுமதி இன்றி மது குடித்ததுடன் சின்னசாமியிடம் மது குடிக்க பணம் கேட்டுள்ளார்.


சின்னசாமி பணம் கொடுக்க மறுத்ததால் சம்பவத்தன்று நள்ளிரவில் ஆத்திரத்தில் தர்மலிங்கம் சின்னசாமியின் ஓலையால் வேயப்பட்ட டீக்கடைக்கு தீ வைத்தார்.


இதில் பிரிட்ஜ், கேஸ் ஸ்டோவ், டீ பாயிலர் உள்ளிட்ட ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.


இதுகுறித்து சின்னசாமி அளித்த புகாரின் பேரில் தர்மலிங்கத்தை வீரப்பசித்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.


பின்னர் தர்மலிங்கம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.


தமிழக குரல் இணையதள செய்தியாளர் 

ம.சந்தானம் 

ஈரோடு மாவட்டம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad