பிரட்டிஷ் ரெட்கிராஸ் செயல்பாடுகளை அறிந்து வந்த காட்பாடி கிளை அவைத் தலைவர் ஜனார்த்தனனுக்கு வேலூர் சப்-கலெக்டர் எ.செந்தில்குமார் பாராட்டு!
வேலூர் , ஜூன் 18 -
வேலூர் மாவட்ட ரெட்கிராஸ் செயல்பாடு களை அறிந்து வந்த காட்பாடி கிளை அவைத் தலைவர் ஜனார்த்தனனுக்கு வேலூர் சப்-கலெக்டர் பாராட்டு லண்டன் மாநகரில் அமைந்துள்ள பிரிட்டிஷ் ரெட் கிராஸ் அலுவலகத்திற்கு சென்றுவந்த இந்தியன் ரெட் கிராஸ் சங்கத்தின் காட்பாடி துணை கிளையின் அவைத் தலைவர் முனைவர் செ.நா.ஜனார்த் தனன் அவர்களை சங்கத்தின் தலைவர் மற்றும் வேலூர் வருவாய் கோட்டாட்சியர் (சப்-கலெக்டர்) எ.செந்தில்குமார் பாராட்டி னார். அன்மையில் லண்டன் மாநகரில் உள்ள பிரிட்டிஷ் ரெட் கிராஸ் சங்க தலைமையத்திற்கு சென்று பிரிட்டிஷ் ரெட் கிராஸ் சங்கத்தின் தலைமை அலுவலர் மேட்மில்ஸ் அவர்களையும் சர்வதேச ரெட் கிராஸ் அமைப்பின் எக்ஸிக்யூட்டிவ் இயக்குனர் டொனேல் அவர்களையும் இன்டர்நேஷனல் கமிட்டி ஆப் ரெட் கிராஸ் பிரிட்டிஷ் கிளையின் தொடர்பு மேலாளர் ஸ்கிரான் செய்டர் அவர்களையும் சந்தித்து பேசினார்.
பிரிட்டிஷ் ரெட் கிராஸ் 2030க்குள் மேற் கொள்ள வேண்டிய செயல்பாடுகள் குறித்தும் பேரிடர் மற்றும் அவசர காலங்களில் மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள் குறித்தும் சுகாதாரம் குறித்தும் 2030க்குள் பிரிட்டிஷ் ரெட் கிராஸ் திட்டமிட்டுள்ள செயல்பாடுகள் குறித்தும் கூறினார். மேலும் செயல் பாடுகள் குறித்த கையேட்டினை வழங்கி னார். மேலும் இந்தியன் ரெட்கிராஸ் சங்கத்தின் காட்பாடி கிளையின் செயல்பாடுகளையும் கேட்டறிந்தார்.
இந்த சந்திப்பின்போதுபிரிட்டிஷ் ரெட் கிராஸ் சங்கத்தின் தலைமை அலுவலர் மேட்மில்ஸ் அவர்கள் முனைவர் ஜனார்த் தனனுக்கு நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தார். இது குறித்து வேலூர் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் சங்கத்தின் தலைவர் எ.செந்தில்குமார் அவர்களிடம் அவைத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் இன்று நேரில் சந்தித்து அறிக்கையினை சமர்பித்து பிரிட்டிஷ் ரெட்கிராஸ் செயல்பாடுகள் குறித்து எடுத்து கூறினார். இந்த சந்திப் பின் போது மேலாண்மைக்குழு உறுப்பி னர் எஸ்.ரமேஷ்குமார்ஜெயின், வேலூர் இரத்த மையத்தின் ஒருங்கிணைப்பாளர் கே.சிவன், உடனிருந்தனர்.இதனை தொடர்ந்து அவைத்தலைவர் முனைவர் செ.நா.ஜனார்த்தனன் அவர்களை சங்கத்தின் தலைவர் மற்றும் வேலூர் வருவாய் கோட்டாட்சியர் (சப்-கலெக்டர்) எ.செந்தில்குமார் சால்வை அணிவித்து பாராட்டினார்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக