பவானி ஆற்றங்கரையோர உள்ள பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வருவாய்த்துறை, காவல்துறை மற்றும் நகராட்சி நிர்வாகத்தின் சார்பாக மேட்டுப்பாளையம் பவானி ஆறு கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
கடந்த சில நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது இன்றும் நீலகிரி மாவட்டத்தில் இரவு மழை பெய்யும் இதனால் பில்லூர் அணையில் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டுவதால் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வாய்ப்புள்ளது எனவே பவானி ஆறு கரையோரம் உள்ள பொது மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வருவாய்த்துறை, காவல்துறை மற்றும் நகராட்சி நிர்வாகத்தின் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது...
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக