ஈரோடு அய்யனரப்பன் கோயிலைச் சேர்ந்தவர் தங்கவேல் (44). இவரது மனைவி சண்முகப்பிரியா. தம்பதியினருக்கு 3 மகள்கள் உள்ளனர். ஈரோடு வ.உ.சி. பூங்காவில் உள்ள மார்க்கெட்டில் காய்கறிக் கடை நடத்தி வந்த தங்கவேல் மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர். இந்நிலையில், நேற்று முன்தினம் அதிக மதுப்போதையில் வீட்டிற்கு வந்த தங்கவேல், ரத்த வாந்தி எடுத்துள்ளார். அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர், ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், தங்கவேல் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சண்முகப்பிரியா அளித்த புகாரின் பேரில், ஈரோடு டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்தியாளர்
ம.சந்தானம்
ஈரோடு மாவட்டம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக