கந்திலி தெற்கு ஒன்றிய தி மு க அலுவ கத்தில் நடைபெற்ற கந்திலி தெற்கு ஒன்றிய செயற்குழு கூட்டம்!
திருப்பத்தூர் , ஜூன் 18 -
பொதுப்பணி துறை, நெடுஞ்சாலைத் துறை மற்றும் சிறுதுறைமுகங்கள் அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் வருகை ஒட்டி
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி தெற்கு ஒன்றிய தி மு க அலுவகத்தில் நடை பெற்ற கந்திலி தெற்கு ஒன்றிய செயற் குழு கூட்டத்தில் திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும், ஜோலார்பேட்டை சட்ட மன்ற உறுப்பினருமான க.தேவராஜி MLA
திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப் பினர் சி.என்.அண்ணாதுரை MP கலந்து கொண்டு சிறப்பான வரவேற்பு அளிக்க பல்வேறு ஆலோசனைகளைவழங்கினார் கள்.கந்திலி தெற்கு ஒன்றிய செயலாளர் டி.அசோக்குமார் அவர்கள் இக்கூட்டத் திற்கு தலைமை தாங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் மு.க.அருள்நிதி, கந்திலி ஊராட்சி மன்ற தலைவர் பிரபு ஒன்றிய நிர்வாகிகள் துரைசாமி, பிரபு மற்றும் கிளைக்கழக நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.
செய்தியாளர்.
மோ. அண்ணாமலை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக