வள்ளலார் அவதார இல்லம் 3.50 கோடி மதிப்பில் திரும்ப கட்டும் பணிக்கான பூமி பூஜை - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 18 ஜூன், 2025

வள்ளலார் அவதார இல்லம் 3.50 கோடி மதிப்பில் திரும்ப கட்டும் பணிக்கான பூமி பூஜை

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே மருதூர் கிராமத்தில் வள்ளலார் அவதார இல்லம் 3.50 கோடி மதிப்பில்  திரும்ப கட்டும் பணிக்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது 


புவனகிரி அருகே வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் உயிர்களுக்கெல்லாம் ஜீவகாருண்யம் போதித்த ராமலிங்க சுவாமி  வள்ளலார் பிறந்த மருதூரில் உள்ள அவரது இல்லம் பல ஆண்டுகளாக இப்பகுதியில் செயல்பட்டு வெளி மாநில வெளி மாவட்ட பக்தர்கள் நாள்தோறும் வந்து வழிபாடு செய்து வந்த நிலையில் தமிழக அரசு  3.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்து  திரும்ப புதிய இல்லம் கட்டும் பணிக்கான பூமி பூஜை காணொளி காட்சி வாயிலாக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார் அதனை தொடர்ந்து கடலூர் மாவட்ட இந்து சமய  அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் ஜோதி தலைமையில் திருஅருட்பா பாராயணம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாட்டுடன் பூமி பூஜைக்கான கல் எடுத்து வைக்கப்பட்டது இதில் மருதூர் முன்னாள் எம்எல்ஏ முன்னாள் அரசு கொறடா மருதூர் ராமலிங்கம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் திமுக கட்சிக்காரர் பலர் பங்கேற்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad