பணகுடியில் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 18 ஜூன், 2025

பணகுடியில் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம்.

பணகுடியில் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம். 

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் தாலுகா, பணகுடியில் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இந்த இயக்கத்தில் இந்திய கம்னியூஸ்ட் கட்சியின் செயலாளர் முகமதுபயாஸ் தலைமை ஏற்றார். 

கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் தோழர் கற்பகம் உரையாற்றினார். காலை முதல் இரவு வரையிலும் கொட்டும் மழையினையும் பொருட்படுத்தாமல் மதவெறி பாஜகவை முறியடிக்க மக்களுக்கு அம்பலபடுத்த வேண்டும் என்ற கட்சியின் முடிவை முழுமையாக அமுல்படுத்த ஒத்துழைப்பு கொடுத்த அனைத்து தோழர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுகளையும், ஒருநாள் உழைப்பை தியாகம் செய்து பிரச்சார இயக்கத்தில் கலந்து கொண்ட பல தோழர்களை பாராட்டினார். 

இந்த மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கமானது காவல்கிணறு, வடக்கன்குளம், கோலியான்குளம், ஊரல்வாய்மொழி, இருக்கன்துறை, வண்ணார்குளம், பொன்னார்குளம் , சங்கனேரி நக்கநேரி, மகேந்திரபுரம், ராதாபுரம் உள்பட 17மையங்களில் நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்ட செய்தி தொடர்பாளர் என்.ராஜன், இருக்கன்துறை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad