குடியாத்தத்தில் பகுதி நேர ரேஷன் கடை திறக்க கோரி அப்பகுதி பொதுமக்கள் திடீர் சாலை மறியல்? - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 17 ஜூன், 2025

குடியாத்தத்தில் பகுதி நேர ரேஷன் கடை திறக்க கோரி அப்பகுதி பொதுமக்கள் திடீர் சாலை மறியல்?

குடியாத்தத்தில் பகுதி நேர ரேஷன் கடை திறக்க கோரி அப்பகுதி பொதுமக்கள் திடீர் சாலை மறியல்?
குடியாத்தம் , ஜூன் 17 -

வேலூர் மாவட்டம்  குடியாத்தம் வட்டம் மற்றும் குடியாத்தம் நகரம்  பகுதியில் இயங்கி வரும் நியாய விலைக்கடை எண்-6ல் வாடகை கட்டிடத்திலிருந்து சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட சொந்த கட்டிடத் திற்கு மாற்றப்பட்டது.இதே இடத்தில்
பகுதி நேர நியாய விலைக்கடை திறக்கு மாறு பொதுமக்கள் கோரியதை அடுத்து இன்று நாள் 17.6.2025 மதியம் சுமார் 12.00 மணி அளவில் குடியாத்தம் வருவாய் கோட்ட அலுவலர் , மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் மற்றும் குடியாத்தம் வட்டாட்சியர் ஆகி யோர் புல தணிக்கை செய்துவிட்டு சென்றுவிட்டனர்
இதனை தொடர்ந்து நெல்லூர் பேட்டை பகுதி மக்கள் ஆண்கள் பெண்கள் என சுமார் 50 நபர்கள் குடியாத்தம்TO பேரணா ம்பட்டு ரோடு சாலையில் பகுதி நேர நியாய விலைக்கடை திறக்க வேண்டி சாலை மறியலில் ஈடுபட முயன்றனர், தகவல் அறிந்து வந்த வட்ட வழங்கல் அலுவர் ,காவல் துறையினர்  மற்றும் அரசு அதிகாரிகள் பேச்சுவார்ரத்தை நடத்தினர்இதனை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்று விட்டனர்,பின்னர் பொதுமக்களின் பிரதிநிதிகள் சுமார் 10 நபர்கள் பழைய நியாய விலைக்ககடை இருந்த இடதிலயே பகுதி நேர நியாய விலைக்கடை திறக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி குடியாத்தம் வரு வாய் கோட்டாட்சியரிடம் மனு அளித்து விட்டு மற்றும் சென்றனர் இதனால் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு காணப்பட்டது

குடியாத்தம் தாலுக்கா 
செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad