அரசு நடுநிலைப் பள்ளியில் பாதுகாப் பற்ற முறையில் கழிவுநீர் தொட்டி தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா? - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 17 ஜூன், 2025

அரசு நடுநிலைப் பள்ளியில் பாதுகாப் பற்ற முறையில் கழிவுநீர் தொட்டி தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா?

அரசு நடுநிலைப் பள்ளியில் பாதுகாப் பற்ற முறையில் கழிவுநீர் தொட்டி தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா?
கே.வி குப்பம் , ‌ ஜூன் 17 - 

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் வட்டம் மேல் காவனூர் கிராமத்தில் அரசு நடு நிலைப்பள்ளியின் உள்ளே நூலகம் கட்டி வருகின்றனர். அதற்காக கழிவுநீர்தொட்டி அமைப்பதற்காக பள்ளம் தோண்டியுள்ள னர்.அந்த பள்ளத்தை தாண்டி தான் பள்ளி குழந்தைகள் ஆய்வகத்திற்கு சென்று வருகின்றனர்.  குழந்தைகள் எவரேனும் விழுந்து அசம்பாவிதம் ஏதும் நடைபெறு வதற்கு முன்னால் அந்தப் பள்ளம் மூடப் பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். இது தொடர்பாக B.D.O அவர்களிடமும் புகார் கூறப்பட்டுள்ளது. அவரும் பள்ளத்தை மூட அறிவுறுத்தியுள் ளார். ஆனால் சுமார் இரண்டு வார காலமாக   நடவடிக்கை இல்லை என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad