சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்பு ணர்வு நிகழ்ச்சியில் விஐடி துணைத்
தலைவர் ஜி.வி.செல்வம் பங்கேற்பு !
காட்பாடி , ஜூன் 17 -
ரெட்கிராஸ் அவைத்தலைவர் ஜனார்த் தனனிடம் துணிப்பைகள் வழங்கல்
வேலூர் மாவட்டம் காட்பாடி வேலூர் மனிதநேய மையம் என்ற அமைப்பின் சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மரக்கன்றுகள் மற்றும் துணிப்பைகள் வழங்கும் விழா வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக விஐடி துணைத் தலைவர் டாக்டர்.ஜி.வி.செல்வம் பங்கேற்று துணி பைகளையும் மரக்கன்றுகளையும் இந்தி யன் ரெட் கிராஸ் காட்பாடி கிளை அவைத் தலைவர் முனைவர் செ. நா.ஜனார்த் தனன் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கி பேசினார். விழாவிற்கு வணிகர் சங்கங் களின் நிர்வாகி பொன் கு சரவணன் தலைமை தாங்கினார். விழாவில் அமைப் பின் பொதுச் செயலாளர் துரை.கருணா நிதி பொருளாளர் ஜோசப் வேலூர்உதவும் உள்ளங்கள் தலைவர்இரா.சந்திரசேகரன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேர மைப்பின் மாவட்ட தலைவர் ஞானவேல் மாநகராட்சி கவுன்சிலர் பாபிகதிரவன், காட்பாடி ரெட் கிராஸ் சங்கத்தின் அவை துணைத் தலைவர் ஆர்.சீனிவாசன் பி.என்.ராமச்சந்திரன், எஸ்.ரமேஷ்கு மார்ஜெயின், அம்மன் சிவராமன் பிரபு வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்ற னர். விழாவில் சுமார் 2000 மரக்கன்று களும், துணிப்பைகளும் பொதுமக்களு க்கு வழங்கப்பட்டன.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக