காட்பாடி அருகே மோட்டார் சைக்கிளில் மணல் கடத்திய வாலிபர் கைது!
காட்பாடி , ஜூன் 17 -
வேலூர் மாவட்டம் காட்பாடி காங்கேய நல்லூர் பாலாற்றில் விருதம்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயந்தி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு 2 மோட்டார் சைக்கிள்களில் 22 மூட்டை மணலை 4 பேர் கொண்ட கும்பல் கடத்திக் கொண்டி ருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக மணல் கடத்திய அதே பகுதியைச் சேர்ந்த இளையபெருமாள் (வயது 28) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமி ருந்து 2 மோட்டார் சைக்கிள்கள், 22மூட்டை மணலை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய 3 பேரை தேடி வருகின்றனர்.
காட்பாடி தாலுகா செய்தியாளர் கே எஸ் அருண்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக