ராணிப்பேட்டை அருள்மிகு ஓம் ஸ்ரீ சப்த கன்னிகள் ஆலய கும்பாபிஷேக விழா ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 8 ஜூன், 2025

ராணிப்பேட்டை அருள்மிகு ஓம் ஸ்ரீ சப்த கன்னிகள் ஆலய கும்பாபிஷேக விழா !

ராணிப்பேட்டை அருள்மிகு ஓம் ஸ்ரீ சப்த கன்னிகள் ஆலய கும்பாபிஷேக விழா !
ராணிப்பேட்டை , ஜூன் 8 -

ராணிப்பேட்டை மாவட்டம். செட்டி தாங்கள் பஞ்சாயத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஓம் ஸ்ரீ ராஜ முனீஸ்வரர் மற்றும் அருள் மிகு ஓம் ஸ்ரீ சப்த கன்னிகள் ஆலய அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா நடை பெற்றது. இதில் மங்கல இசை வேத பாராயணம், விநாயகர் பூஜை, மகா கணபதி லக்ஷ்மி நவகிரக ஹோமங்கள், கோ பூஜை, புதிய சிலைகளுக்கு கண் திறத்தல் வைபவம், மகா பூர்ணாஹீதி தீபாராதனை, தொடர்ந்து கரிகோல ஊர் வலம், வீதி உலா வருதல், முதல் காலை யாக பூஜைகள், வாஸ்து சாந்தி, பிரவேச பலி, அங்குரார் பணம் ஆராதனை கலச புறப்பாடு, பூஜைகள் நடைபெற்றுகும்பாபி ஷேக பெருவிழா நடைபெற்றது.
இவ்விழாவில் சுப்பிரமணி நாட்டாமை, வெள்ளை நாட்டாமை வளர்மதி அன்பழ கன் ஊராட்சி மன்ற தலைவர் பரிமளா தியாகராஜன் ஒன்றிய குழு உறுப்பினர்  ஆகியோர் தலைமை வகித்தனர்.
சந்திரசேகர் முன்னால் ஊராட்சி மன்ற தலைவர்,புலவர் சுப்பிரமணியம் முன்னாள் ஒன்றிய துணை பெருந் தலைவர்,துரை ஊராட்சி மன்ற துணைத் தலைவர், அருணகிரி, சரவணன் ஆகியோர் வரவேற்றனர். கும்பாபிஷேகத் தை தலைமை தாங்கி நடத்துபவர்கள்,
ஸ்ரீ ராஜிவ் சிவம் குருஜி,கோவில் கட்டிய ஸ்தபதி தங்க ராஜா, கணேசன் குருசாமி மற்றும் ஆலய நிர்வாகிகள் செட்டி தாங்கள் பொதுமக்கள் பங்கேற்றனர்.
 ஆலய நிர்வாகம் தியாகராஜன் ஆகியோர் சிறப்பாக நடத்தினார்.

ராணிப்பேட்டை சிறப்பு செய்தியாளர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad