திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில், ஜூன் 26 – சர்வதேச போதைவிலக்கு தினத்தை முன்னிட்டு, மதுவிலக்கு மற்றும் காவல் துறை, வருவாய் துறை, பேரிடர் மேலாண்மை துறை ஆகியவை இணைந்து விழிப்புணர்வு பேரணியை ஏற்பாடு செய்திருந்தன.அதில் தாராபுரம் பிஷப் தார் கல்லூரியைச் சேர்ந்த மாணவ- மாணவிகள் பேரணி நடைபெற்றது.தாராபுரம் அமராவதி சிலை ரவுண்டானாவில் தொடங்கிய பேரணியை தாராபுரம் காவல் ஆய்வாளர் விஜயசாரதி கொடியசைத்து தொடக்கி வைத்தார். காவல்துறையினரைச் உதவி ஆய்வாளர்கள் சிவராஜ், பரதன், கார்வேந்தன் , கிராம நிர்வாக அலுவலர் சத்தியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது போதை உண்டாக்கும் பொருட்கள் நம் வாழ்வை நாசம் செய்யும்”, “போதை விலகல் நம் வழிகாட்டி” போன்ற கோஷங்களை எழுப்பிக்கொண்டு, தாராபுரத்தின் முக்கிய சாலைகள் வழியாக பேரணியாக சென்றனர்.
இதில் தாராபுரம் பிஷப்தார்ப் கல்லூரி முதல்வர் விக்டர் லாசரஸ், துணை முதல்வர் பிரேம்நாத், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் ராஜேஷ், ஏஞ்சலின் பிரபா, உடற்கல்வி இயக்குநர் தீன தயாளன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.முடிவில்
போதைப் பொருட்களின் தீமைகளை பற்றி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உரையாற்றப்பட்டது. மாணவ, மாணவிகள் உறுதிமொழி எடுத்து, “போதை இல்லாத சமூகமே நலமுடைய சமூகம்” என்ற ஆழமான நம்பிக்கையுடன் நிகழ்ச்சியை முடித்தனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக