நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தெற்கு மாவட்ட செயலாளர் பெருமிதம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 27 ஜூன், 2025

நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தெற்கு மாவட்ட செயலாளர் பெருமிதம்.


பெண்கள் ஆதரவு நூறு சதவீதம் இருப்பதால் திமுக அணைத்து இடங்களில் வெற்றி பெறும் என்று நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தெற்கு மாவட்ட செயலாளர் பெருமிதம்.



மதுரை தெற்கு மாவட்ட திமுக சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இரண்டாம் கட்டமாக சுமார் 1500 குடும்ப அட்டை காரர்களுக்கும்,பொது மக்களுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கள்ளிக்குடி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமமானகே.வெள்ளாகுளம் கிராமத்தில் திமுக தெற்கு மாவட்ட செயலாளர் சேடப்பட்டி மூ.மணிமாறன் தலைமையில்  நலத்திட்ட உதவிகள் வழங்கினார். மேலும் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி உறுதி என்று சிறப்புரை ஆற்றினார். பெண்கள் ஆதரவு நூறு சதவீதம் இருக்கிறது.மீண்டும் மூ.க.ஸ்டாலின் ஆட்சி அமையும் என்று கூறினார். இந்நிகழ்ச்சியில் தலைமைச் செயற்குழு உறுப்பினர் , இளமகிழன்,  பொதுக்குழு உறுப்பினர் ஆதிமூலம் ,சிவமுருகன்  இளைஞர் அணி செயலாளர் விமல், ஒன்றிய செயலாளர் மதன்குமார், ராமமூர்த்தி, தனபாண்டியன் ஆலம்பட்டி சண்முகம், வருசை முகமது, நகரச் செயலாளர் ஸ்ரீதர் நகர மன்ற தலைவர் ரம்யா முத்துக்குமார் துணைத் தலைவர் ஆதவன் அதியமான், வழக்கறிஞர்கள் ,மற்றும் கட்சி நிர்வாகிகள் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தெற்கு ஒன்றிய செயலாளர் மதன்குமார் செய்திருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad