தமிழ் நாடு அரசு பள்ளிக் கல்வித் துறையும், தமிழ் நாடு அரசு குழந்தைகள் பாதுகாப்பு, குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவை துறையும் இணைந்து ஜூன் 23ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை போதை இல்லாத விழிப்புணர்வு வாரம் என்ற தலைப்பில் பல்வேறு நிகழ்ச்சிகளை மாநிலம் முழுவதும் பல்வேறு பள்ளிகளில் நடத்தி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.தலைமை ஆசிரியர் குணசீலராஜ் தலைமை தாங்கினார். காலை பள்ளி மாணவர் கூடுகை நிறைவு பெற்றதும், பள்ளியின் அனைத்து மாணவர்களும் பள்ளி மைதானத்தில் அமர வைக்கப்பட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
நாசரேத் காவல் ஆய்வாளர் வனசுந்தர் கலந்துகொண்டு போதைப்பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு குறித்து உரையாற்றினார். அவர் பேசுவையில், மாணவர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகாமல் இருக்க வேண்டும், எந்த ஒரு போதைப் பொருளையும் பயன்படுத்தக் கூடாது,
நண்பர்கள் பயன்படுத்தினால் அதை தவறு என்று எடுத்துச் சொல்ல வேண்டும், சமுதாயத்திற்கு பயனுள்ளவர்களாக வாழ வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். போதை இல்லா தமிழகம், என் எதிர்காலம், என் தேர்வு என்ற கருத்து மாணவர்களிடம் எடுத்துரைக்கப்பட்டது.
நிகழ்ச்சியில், காவலர் சேகர் கலந்து கொண்டார். ஆசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தாளாளர் வழக்கறிஞர் பிரபாகர், உடற்கல்வி இயக்குனர் ஜெபசிங் கால்டுவெல், உடற்கல்வி ஆசிரியர் தனபால், தேசிய மாணவர் படை அலுவலர் சுஜித் செல்வ சுந்தர், சாரணர் இயக்க இணை பொறுப்பாசிரியர் ஸ்டீபன் பிரேம்குமார், கணித ஆசிரியர் நேசகுமார் பிற ஆசிரியர்கள் அலுவலர்கள் செய்திருந்தனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக