அந்தரத்தில் தொங்கும் நடைபாதை சரி செய்து தருமா சம்பந்தப்பட்ட நிர்வாகம்
நீலகிரி மாவட்டம் உதகைக்கு உட்பட்ட இத்தலார் ஊராட்சி அருகே உள்ள வ ஊ சி நகர் பகுதியில் சுமார் 150 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அங்குள்ள நடைபாதை அமைத்து சுமார் ஏழு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது என்று கூறப்படுகின்றது. இப்பொழுது அந்த நடைபாதை ஆனது பழுதடைந்து புதர்கள் மண்டி அந்தரத்தில் தொங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அவ்வழியில் நடக்கும் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் நடந்து செல்கின்றனர். உடனடியாக நடவடிக்கை எடுத்து நடைபாதையை சீரமைத்து மக்களுக்கு பயன்படும் வகையில் ஏற்பாடு செய்யுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட இணையதள செய்தி பிரிவு.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக