சிவகங்கை மாவட்ட புதிய ஆட்சியராக திருமதி கா. பொற்கொடி இ.ஆ.ப அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 27 ஜூன், 2025

சிவகங்கை மாவட்ட புதிய ஆட்சியராக திருமதி கா. பொற்கொடி இ.ஆ.ப அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார்


சிவகங்கை மாவட்ட புதிய ஆட்சியராக திருமதி கா. பொற்கொடி இ.ஆ.ப அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார்.


தமிழகத்தில் சமீபத்தில் பல்வேறு மாவட்டங்களில் பணிபுரித்து வந்த மாவட்ட கலெக்டர்கள் மற்றும் இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் பணியிட மாற்றம் தொடர்பான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டது. அதன் அடிப்படையில் சிவகங்கை மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த திருமதி ஆஷா அஜித் இ.ஆ.ப அவர்கள் தமிழ்நாடு ஊரக புத்தகத் திட்டம் மற்றும் திட்ட இயக்குனர், தமிழ்நாடு மகளிர் வேலை வாய்ப்பு மற்றும் பாதுகாப்பு திட்டம் ஆகியவற்றின் தலைமை இயக்க அலுவலராக நியமனம் செய்யப்பட்டார். மேலும் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையத்தின் இணை மேலாண்மை இயக்குனராக பணியாற்றி வந்த திருமதி கா. பொற்கொடி இ.ஆ.ப அவர்களை சிவகங்கை மாவட்டத்தின் புதிய ஆட்சித் தலைவராக நியமித்து செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. இந்நிலையில் வெள்ளிக்கிழமையன்று திருமதி கா. பொற்கொடி இ.ஆ.ப அவர்கள் சிவகங்கை மாவட்ட புதிய ஆட்சியராக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுக்கொண்ட திருமதி கா. பொற்கொடி அவர்களுக்கு சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசியல் பிரமுகர்கள், அரசுத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad