திருமங்கலம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில் ஐடி ஊழியர் கொடூரமாக சம்பவ இடத்திலேயே பலி - உடலை கைப்பற்றி போலீஸ் விசாரணை - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 4 ஜூன், 2025

திருமங்கலம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில் ஐடி ஊழியர் கொடூரமாக சம்பவ இடத்திலேயே பலி - உடலை கைப்பற்றி போலீஸ் விசாரணை

 


திருமங்கலம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில் ஐடி ஊழியர் கொடூரமாக சம்பவ இடத்திலேயே பலி - உடலை கைப்பற்றி போலீஸ் விசாரணை.




மதுரை எல்லீஸ் நகரை சேர்ந்த பெருமாள் சாமி என்பவரது மகன் ராஜசேகரன் (35) இவர் சென்னையில் உள்ள தனியார் ஐடி(TCS) நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.இந்த நிலையில் விடுமுறைக்காக மதுரை வந்தவர் சொந்த வேலை காரணமாக இரு சக்கர வாகனத்தில் தென்காசி சென்று விட்டு வேலையை முடித்து விட்டு இரு சக்கர வாகனத்தில் இன்று மாலை திரும்ப வந்து கொண்டிருந்தார் மதுரை மாவட்டம் திருமங்கலம் - திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் கப்பலூர் தொழிற்பேட்டை அருகே வந்த போது சுங்கச்சாவடி ஊழியர்கள் சாலை பராமரிப்பு பணிக்காக பாதைகளில் தடுப்பு ஏற்படுத்தி இருந்துள்ளனர். இதனால் வாகனங்கள் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக சென்ற போது எதிர்பாராத விதமாக ராஜசேகரன் இருசக்கர வாகனத்தின் பின்னால் விருதுநகரிலிருந்து கர்நாடகா நோக்கிச் சென்ற லாரி பலமாக மோதியதில் உடலில் பலத்த காயம் ஏற்பட்டு ராஜசேகரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.




சம்பவம் குறித்து திருமங்கலம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது தகவல் அறிந்து வந்த திருமங்கலம் நகர் காவல் நிலைய போலீசார் இறந்த ராஜசேகரன் உடலை கைப்பற்றி திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இறந்த ராஜசேகரன் கடந்த வருடம் ரயிலில் செல்லும் போது திருச்சி அருகே தவறி விழுந்து காயம் அடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தனியார் ஐடி நிறுவன ஊழியர் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது பின்னால் வந்த லாரி மோதிய விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad