வள்ளலார் தொடக்கப் பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 18 ஜூன், 2025

வள்ளலார் தொடக்கப் பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம்


வள்ளலார் தொடக்கப் பள்ளியில்   இலவச கண் சிகிச்சை முகாம்


கும்பகோணம், கும்பகோணம் வள்ளலார் லயன்ஸ் சங்கம் சார்பில், வரும், 22ல் இலவச கண் சிகிச்சை முகாம், கீழக் கொட்டையூர் வள்ளலார் தொடக்கப் பள்ளி  வளாகத்தில் நடக்கிறது. முகாமில், கண் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்னைகளுக்கும் இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.


மேலும், ரத்தத்தில் சர்க்கரை அளவு, ரத்தக்கொதிப்பு அளவு, கண்ணில் பிரஷரின் அளவு ஆகியவை இலவசமாக பரிசோதனை செய்யப்படுகிறது. கண் அறுவை சிகிச்சை தேவைப்படுவோருக்கு, மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு, கும்பகோணம் வள்ளலார் லயன்  சங்க சார்பில் அழைத்து சென்று இலவசமாக கண் அறுவை சிகிச்சை நடக்கிறது. முகாமில் கலந்து கொள்பவர்கள் ஆதார் கார்டு, ரேஷன் கார்டு ஜெராக்ஸ் கொண்டுவர வேண்டும். மேலும் விவரங்களுக்கு 94430 32052

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad