சுங்கச்வடியில் கட்டணம் வசூல் செய்ய வேண்டாம்: அதிகாரியிடம் மேயர் வலியுறுத்தல் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 4 ஜூன், 2025

சுங்கச்வடியில் கட்டணம் வசூல் செய்ய வேண்டாம்: அதிகாரியிடம் மேயர் வலியுறுத்தல்

சுங்கச்வடியில் கட்டணம் வசூல் செய்ய வேண்டாம்: அதிகாரியிடம் மேயர் வலியுறுத்தல்

புதூர் பாண்டியாபுரம் சுங்கச் வடியில் வரி வசூல் செய்ய வேண்டாம் என்று சுங்க சாவடி அதிகாரியிடம் மேயர் ஜெகன் பெரியசாமி வலியுறுத்தினார். 

மதுரை - தூத்துக்குடி சாலை எந்த பராமரிப்புப் பணியும் இல்லாமல், சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளதால் சேதமடைந்துள்ள சாலையை முழுமையாகச் சீரமைக்கும் வரை எலியார்பத்தி மற்றும் புதூர் பாண்டியபுரத்திலும் உள்ள சுங்கச் சாவடிகளில் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க இடைக்காலத் தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நேற்று உத்தரவிட்டது.

ஆனால், புதூர் பாண்டியாபுரம் சுங்கச் சாவடியில் இன்று காலை முதல் வழக்கம் போல கட்டணம் வசூல் செய்யப்பட்டது. இதனால் டோல்கேட் ஊழியர்களுடன் வாகன ஓட்டிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், தடையை மீறி கட்டணம் வசூல் செய்வதை கண்டித்து லாரி உரிமையாளர் சங்க்தினர் லாரிகளை டோல்கேட் முன்பு நிறுத்தி முற்றுகையிட்டனர். 

இந்த நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவினை தொடர்ந்து தூத்துக்குடி எட்டையாபுரம் ரோட்டிலுள்ள புதூர் பாண்டியாபுரம் சுங்கச் சாவடியில் வரி வசூல் செய்ய வேண்டாம் என்று சுங்க சாவடி அதிகாரியிடம் லாரி உரிமையாளர் சங்க தலைவர் என்கின்ற முறையில் மேயர் ஜெகன் பெரியசாமி சுங்க வரி வசூல் செய்ய வேண்டாம் என்று கூறினார். 

இதில், சிட்டி லாரி புக்கிங் ஏஜன்ட்ஸ் சங்க அசோசியேஷன் தலைவர் சுப்புராஜ், மாநகர துணை செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான கீதா முருகேசன், வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், பகுதி கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ் குமார், தொமுச மாவட்ட தலைவர் பேச்சிமுத்து, தூத்துக்குடி லாரி ஓனர்ஸ் அசோசியேஷன் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad