திருநெல்வேலி டாண் சிட்டி லயன்ஸ் சங்கம் சார்பாக சாலையோரம் வியாபாரம் செய்பவர்களுக்கு நிழற்குடை வழங்கும் நிகழ்வு இன்று பாளையங்கோட்டை சங்கத்தின் செயலாளர் லயன் S.பொன்ராஜ் தலைமையில், பட்டய தலைவர் லயன் S.V. ஜானகிராம் அந்தோணி முன்னிலையில் நடைபெற்றது. லயன் சங்கத்தின் இயக்குனரும், திருநெல்வேலி தனியார் பஸ் உரிமையாளர் சங்க தலைவர் லயன் M. செல்லையா, நிழற்குடையை பயனாளி சிவகாமிக்கு வழங்கினார்.
நிகழ்வில் லயன் சங்க வருங்கால மண்டல தலைவர் அட்வகேட் லயன் எம்.சி. ராஜன், பொருளாளர் லயன் ஆர்.ராஜன், வட்டாரத் தலைவர் லயன் ராதாகிருஷ்ணன், இயக்குனர்கள் லயன் V.மீனாட்சி சுந்தரம், லயன் D.G.D லாரன்ஸ் ஆகியோர் பங்கு பெற்றனர்.
தொடர்ந்து திருநெல்வேலி மாவட்ட தனியார் பஸ் சங்க மாவட்ட தலைவராக தேர்வு செய்யப்பட்ட லயன் M. செல்லையா அவர்களுக்கு சங்கம் சார்பாக லயன் S.பொன்ராஜ் மற்றும் லயன் M.C.ராஜன் ஆகியோரால் சால்வை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக