கீழடி அறிக்கையை மத்திய அரசு நிராகரித்தது தொடர்பாக திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் சமூக வலைத்தளங்களில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை விமர்சித்து கருத்து பதிவிடப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தது.
இந்நிலையில் அதிமுக சார்பில் இன்று திமுக ஐடி வின் பொறுப்பாளரும், தமிழக தொழில்துறை அமைச்சருமான டி.ஆர்.பி. ராஜா மீது வடலூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. கடலூர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் சொரத்தூர் ராஜேந்திரன் தலைமையில் அக்கட்சியினர் சுமார் 100 பேர் வடலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரில், முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியை விமர்சித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட திமுக ஐ.டி.விங் பொறுப்பாளர் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா மற்றும் இந்த கார்ட்டூனை சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டு இருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக