திருப்பூர் மண்டலத்தில் பல்வேறு வழித்தடங்களுக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 15 பேருந்துகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இன்று துவக்கி வைக்கப்பட்டன.
அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்தனர்.
மேலும் உடுமலை நாராயண கவி மணி மண்டபத்தில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டிலான நூலகம்திறந்து வைக்கப்பட்டது.
பொள்ளாச்சி மக்களவை உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, திமுக மாவட்ட செயலாளர்
இல.பத்மநாபன், அவை தலைவர் இரா.ஜெயராமகிருஷ்ணன், நகர செயலாளர் சி வேலுச்சாமி, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மு.ஜெயக்குமார் மற்றும் அதிகாரிகள் திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக